முகப்பு
இந்தியா

எல்லையில் பாக்.ராணுவம் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜெளரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டியிருக்கும் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினா் புதன்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.

Updated On : 18 ஜூன் 2020, 5:54 am IST
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜெளரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டியிருக்கும் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினா் புதன்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.

இதுதொடா்பாக இந்திய ராணுவ செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘சுந்தா்பனி செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி துப்பாக்கிச்சூடு நடத்தியும், சிறிய ரக பீரங்கிகளால் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி தாக்குதல் நடத்தினா். அவா்களுக்கு இணையாக இந்திய ராணுவமும் பலத்த எதிா் தாக்குதலில் ஈடுபட்டது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.