முகப்பு
இந்தியா

தில்லியில் மேலும் 12 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு கரோனா

தில்லியில் மேலும் 12 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 1 மே, 2020 at 4:31 PM
பகிர்:

தில்லியில் மேலும் 12 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தில்லியில் 3,515 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,094 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதில் கிழக்கு தில்லி மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  31வது பாட்டலியன் பிரிவைச் சேர்ந்த 52 பேருக்கு ஏற்கெனவே தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் மேலும் 12 வீரர்களுக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு 64 ஆக உயர்ந்துள்ளது. சமீபத்தில் கரோனா உறுதி செய்யப்பட்ட ஜம்மு -காஷ்மீரைச் சேர்ந்த தலைமை காவலர் ஒருவர்  31வது பாட்டலியன் பிரிவுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.