முகப்பு
இந்தியா

பிளாஸ்மா சிகிச்சையால் ஒருவர் குணமடைந்தார்: கேஜரிவால் தகவல்

பிளாஸ்மா சிகிச்சையில் நல்ல முடிவுகள் வந்துள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 மே, 2020 at 2:09 PM
பகிர்:

பிளாஸ்மா சிகிச்சையில் நல்ல முடிவுகள் வந்துள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது: 

தில்லியில் இதுவரை 3,515 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,094 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

Advertisement

பிளாஸ்மா சிகிச்சையின் நல்ல முடிவுகள் வந்துள்ளன. தற்போது முழு சோதனையில் உள்ளது. பிளாஸ்மா சிகிச்சை மூலமாக எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் ஒருவர் குணமடைந்துள்ளார். கரோனாவில் இருந்து மீண்ட 1,100 பேரிடமும், மற்றவர்களின் உயிரைக் காக்க, பிளாஸ்மா தானம் செய்ய வலியுறுத்தியுள்ளோம்.

தில்லியில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி 5 கிலோவில் இருந்து 10 கிலோவாக அதிகரிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.