நாசிக் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று
மகாராஷ்டிரத்தின் நாசிக் மாவட்டத்தில் இன்று மேலும் 27 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
மகாராஷ்டிரத்தின் நாசிக் மாவட்டத்தில் இன்று மேலும் 27 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு 360 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட 360 பேரில் 324 பேர் மலேகான் நகரத்தைச் சேர்ந்தவர்கள். 16 பேர் நாசிக் நகர், 17 பேர் மாவட்டத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,296 ஆகவும், உயிரிழப்பு 521 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement