முகப்பு
இந்தியா

தில்லி சிஆர்பிஎஃப் தலைமை அலுவலகத்துக்கு சீல்

தில்லியில் உள்ள சிஆர்பிஎஃப் தலைமை அலுவலக ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

Updated On : 3 மே, 2020 at 1:13 PM
பகிர்:

தில்லியில் உள்ள சிஆர்பிஎஃப் தலைமை அலுவலக ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

தில்லியில் மயூர் விஹார் பகுதியில் பணியாற்றி வந்த 31-வது பட்டாலியனைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் உயர் அதிகாரி உள்பட 122 வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அப்பகுதி முழுவதும்சீல் வைக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து தில்லியில் உள்ள சிஆர்பிஎஃப் தலைமையகத்தில்  பணியாற்றி வந்த ஓட்டுநர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அலுவலகம் மற்றும் அதனைச் சுற்றி சுகாதாரப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

Advertisement

மேலும், சிறப்பு இயக்குநர் ஜெனரல், துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் உட்பட மொத்தம் 40 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்னர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.