ஹரியாணாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 421 ஆக உயர்வு
ஹரியாணாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 421 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
ஹரியாணாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 421 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில், ஹரியாணாவில் மேலும் 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 421 ஆக அதிகரித்துள்ளது.
Advertisement
இதுவரை கரோனா பாதிக்கப்பட்ட 242 நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.