இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத் துறை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 83 பேர் மரணம் அடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 83 பேர் மரணம் அடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,389 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2573 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் கரோனா பாதிப்பு 42,836 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
இந்தியாவில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று 11,762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 29,685 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.