புதுச்சேரியில் கரோனாவுக்கு ஒரே நாளில் 13 பேர் பலி
புதுச்சேரியில் கரோனாவுக்கு ஒரே நாளில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரியில் கரோனாவுக்கு ஒரே நாளில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை 4,623 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் புதுச்சேரியில் 270 பேரும், காரைக்காலில் 72 பேரும், ஏனாமில் 11 பேரும், மாஹேவில் 19 பேரும் என மொத்தம் 372 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,400 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
இதில் 1,816 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 3,423 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், 13 பேர் ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 513 (1.94 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே 443 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 20,648 (78.21 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.