முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 18,056 பேருக்கு கரோனா

​மகாராஷ்டிரத்தில் புதிதாக 18,056 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 செப்டம்பர், 2020 at 9:46 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:56 PM


மகாராஷ்டிரத்தில் புதிதாக 18,056 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 18,056 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13,39,232 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 380 பேர் பலியாகியுள்ளனர், 13,565 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 35,571 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 10,30,015 பேர் குணமடைந்துள்ளனர். 2,73,228 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

மும்பை:

மும்பையில் மேலும் 2,261 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,98,720 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 44 பேர் பலியாகியுள்ளனர், 4,190 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,62,939 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 8,791 பேர் பலியாகியுள்ளனர். 26,593 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.