முகப்பு
இந்தியா

கர்நாடக சட்டத்துறை அமைச்சருக்கு கரோனா தொற்று உறுதி

கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசுவாமி கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 28 செப்டம்பர், 2020 at 5:25 PM
ஜே.சி.மதுசுவாமி
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:57 PM

கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசுவாமிக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், பாஜகவைச் சேர்ந்தவரும், கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசுவாமி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

Advertisement

முன்னதாக, அமைச்சரின் ஓட்டுநருக்கும், வீட்டு சமையலருக்கும் தொற்று இருப்பது உறுதியானது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.