இந்தியா

6-9 ம் வகுப்புகளுக்கு விடுமுறை: கர்நாடகத்தில் கரோனா கட்டுப்பாடுகள்

DIN

கர்நாடகத்தில் கரோனா தொற்று பரவலைக் குறைக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.

கர்நாடகத்தில் இன்று (ஏப்.2) ஒரு நாளில் மட்டும் 4,991 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.

அதில், 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

பேரணி, போராட்டம் போன்றவற்றை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே நிரப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் போன்ற பகுதிகளில் அதிக அளவு மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT