முகப்பு
இந்தியா

புணேவில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் நாளை முதல் மாலை 6 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிர மாநிலம் புணேவில் நாளை முதல் மாலை 6 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.

கரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதனைத் தடுக்கும் வகையில் 12 மணிநேர இரவுநேர ஊரடங்கை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தொற்று அதிகமுள்ள மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரக் குழுவையும் மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளது. அவர்கள் மாநில அரசுடன் கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் பல்வேறு இடங்களில் தொற்று அதிகரித்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில், மாநில அரசுகள் தடை உத்தரவுகளை பிறப்பித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அந்தவகையில் புணேவில் நாளை முதல் 12 மணிநேர இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பார்கள், விடுதிகள், உணவகங்கள் என அனைத்தும் மூடப்படுகிறது. பொதுமக்கள் அவசியமின்றி வெளியே  வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. டோர் டெலிவரி சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுநிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்றும், இறுதிச் சடங்குகள் மற்றும் திருமணத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஏழு நாள்களுக்கு நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும், அதனைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →