முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 49,447 பேருக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தில் புதிதாக 49,447 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
கோப்புப்படம்
பகிர்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 49,447 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பின் 2-ம் அலை தீவிரம் அடைந்துள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது. 

இந்த நிலையில் மகாராஷ்டித்தில் புதிதாக மகாராஷ்டித்தில் 49,447 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,53,523 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 37,821 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

கரோனாவுக்கு இன்று மேலும் 277 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 24,95,315 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 4,01,172 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →