உ.பி.,யில் பாஜக தலைவர் சுட்டுக்கொலை
உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாஉ.பி.,யில் பாஜக தலைவர் சுட்டுக்கொலை
உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், நாராயண்பூரைச் சேரந்தவர் பாஜக தலைவர் பிரிஜேஷ் சிங்(52). இவர் உ.பி., மாநிலத்தில் விரைவில் நடக்கவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுகிறார். நாராயண்பூர் பகுதியில் நேற்றிரவு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற இவர் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது மொக்லஹா எனும் இடத்தில் இவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் தலை மற்றும் மார்பு பகுதியில் குண்டு துளைத்ததில் பிரிஜேஷ் சிங் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதுகுறித்து பிரிஜேஷ் சிங் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அத்துடன் துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரியும் அவர்கள் ஆர்ப்பட்டாத்தில் ஈடுபட்டனர்.
புகாரைத்தொடர்ந்து இவ்வழக்கில் 3 பேரை கைது செய்த காவல்துறையினர் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.