‘மேற்கு வங்கத்தை கைப்பற்ற முயற்சிக்கும் குஜராத்திகள்’: மம்தா பானர்ஜி
மேற்கு வங்க மாநிலத்தைக் கைப்பற்ற குஜராத்திகள் முயற்சித்து வருவதாக திரிணமூல் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தைக் கைப்பற்ற குஜராத்திகள் முயற்சித்து வருவதாக திரிணமூல் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் எஞ்சிய தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் ஹவ்ராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற திரிணமூல் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, “உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரில் இருந்து அழைத்து வரப்பட்ட குண்டர்கள் மூலம் மேற்குவங்கத்தை கைப்பற்ற குஜராத்திகள் முயல்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
மேலும் “ மேற்குவங்கத்தில் வகுப்புவாத பதற்றத்தை உருவாக்க பாஜக முயல்கிறது. குஜராத்தைப் போல வங்கத்தைக் கைப்பற்ற விட மாட்டோம்” என குற்றம் சாட்டினார்.