இந்தியா

2ஆம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் துணை குடியரசுத் தலைவர்

DIN

2ஆவது தவணையாக துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக துணைக்குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து 2ஆவது தவணையாக ஞாயிற்றுக்கிழமை வெங்கய்யா நாயுடு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். 

இதுதொடர்பாக தனது சுட்டுரைப்பதிவில் அவர், தடுப்பூசிக்கு தகுதியுள்ள அனைவரையும் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் நாட்டின் சில பகுதிகளில் தொற்று பரவுவதைக் கருத்தில் கொண்டு, சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மக்கள் பின்பற்ற வேண்டும் என வெங்கய்யா நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT