முகப்பு
இந்தியா

கோவாவில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை: முதல்வர்

கோவாவில் கரோனா குறித்து இதுவரை எந்த கட்டுப்பாடுகளும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் திங்களன்று தெரிவித்தார். 

Updated On : 5 ஏப்ரல், 2021 at 12:53 PM
கோவாவில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை: முதல்வர்
பகிர்:

கோவாவில் கரோனா குறித்து இதுவரை எந்த கட்டுப்பாடுகளும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் திங்களன்று தெரிவித்தார். 

பனாஜியில் அரசு விழாவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வர் பேசியதாவது, 

கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளும் படி அரசு அறிவுறுத்தியுள்ளது. சமூக இடைவெளி கடைப்பிடிப்பதுடன், ஒவ்வொருவரும் தங்களைச் சோதனை செய்துகொள்ள வேண்டும். 

Advertisement

மேலும், கரோனா பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று அவர் கூறியுள்ளார். 

கோவாவில் நாளொன்றுக்கு 250-க்கும் மேற்பட்ட கரோனா வழக்குகள் பதிவாகி வருகின்றன. எனவே, அதைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். கட்டுப்பாடுகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தனிப்பட்ட முறையில் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம் என்று அவர் கூறினார். 

கடந்த 24 மணிநேரத்தில் 265 தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 2,077 ஆக உயர்ந்துள்ளது. 835 வைரஸ் தொற்றுக்கு இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.