மும்பை: கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், தொற்றுக்குள்ளாகி, உடல்நிலை பாதிக்கப்படும் நோயாளிகள் தாங்கள் விரும்பும் மருத்துவமனையில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்க வேண்டாம் என்று மும்பை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மும்பை மாநகராட்சி பொதுமக்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், நாங்கள் தயவுகூர்ந்து பொதுமக்கள் கேட்டுக் கொள்வது என்னவென்றால், உங்களுக்கு வசதியாக ஒரு மருத்துவமனையில் இடம்கிடைக்க வேண்டும் என்பதற்காக சிகிச்சையைத் தள்ளிப்போடுவதோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் காத்திருப்பதோ வேண்டாம், கிடைக்கும் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சையைத் துவக்குவதே சிறந்தது. ஏனென்றால் பல நோயாளிகள் மருத்துவமனைக்காக காத்திருக்கும் போது நிலைமை மோசமடைவதாகக் கூறப்பட்டுள்ளது.
அதுபோல, மும்பையில் தற்போது கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தயாராக இருக்கும் படுக்கை வசதிகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்திலிருந்து 15971 ஆக உயர்ந்துள்ளது என்றும் மாநகராட்சி ஆணையத் தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே கரோனா நோயாளிகள் அதிகமிருக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.