மாலை 7.11 மணி நிலவரம்: அசாமில் அதிகபட்ச வாக்குப்பதிவு!
மாலை 7.11 மணி நிலவரப்படி அசாமில் அதிகபட்சமாக 82.29 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
மாலை 7.11 மணி நிலவரப்படி அசாமில் அதிகபட்சமாக 82.29 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாமில் 3-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில் மாலை 7.11 மணி நிலவரப்படி பதிவான வாக்கு சதவிகிதம் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
அசாம்: 82.29 சதவிகிதம்
கேரளம்: 70.04 சதவிகிதம்
புதுச்சேரி: 78.13 சதவிகிதம்
தமிழகம்: 65.11 சதவிகிதம்
மேற்கு வங்கம்: 77.68 சதவிகிதம்