வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்போது?
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளத்தில் ஒரேகட்டமாக பேரவைத் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடந்து முடிந்தது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளத்தில் ஒரேகட்டமாக பேரவைத் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடந்து முடிந்தது.
இதுதவிர்த்து அசாம் மற்றும் மேற்கு வங்கத்திலும் 3-ம் கட்ட தேர்தல் செவ்வாய்க்கிழமை நடந்து முடிந்தது.
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு திட்டமிட்டபடி வெற்றிகரமாக மாலை 7 மணிக்கு நிறைவடைந்தது.
இதையடுத்து, அனைவரது எதிர்பார்ப்பும் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மீது எழுந்துள்ளது.
ஆனால், ஏப்ரல் 29 மாலை 7.30 மணி வரை வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிட இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் 8-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ம் தேதி நடைபெறுகிறது. அது நிறைவடைந்தவுடனே கருத்துக் கணிப்புகளை வெளியிட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் உத்தரவாக உள்ளது.
இதனால், மேற்கு வங்கத்திலும் முழுமையாக வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் ஏப்ரல் 29 மாலை 7.30 மணிக்குப் பிறகு வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகவுள்ளன.