ம.பி.யின் நகர்ப்புறங்களில் 60 மணி நேர பொதுமுடக்கம் அறிவிப்பு 
இந்தியா

ம.பி.யின் நகர்ப்புறங்களில் 60 மணி நேர பொதுமுடக்கம் அறிவிப்பு

கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அனைத்து நகர்ப்புறங்களிலும் 60 மணி நேர முழு ஊரடங்கு பிறப்பித்து மத்தியப் பிரதேச அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

IANS

கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அனைத்து நகர்ப்புறங்களிலும் 60 மணி நேர முழு ஊரடங்கு பிறப்பித்து மத்தியப் பிரதேச அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், 

மாநிலத்தில் கரோனா வைரஸ் நிலைமையை மறுபரிசீலனை செய்துள்ளதாகவும், அனைத்து நகர்ப்புறங்களிலும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை இரண்டு நாள்களுக்கு முழுமையான ஊரடங்கு விதிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 

ஏற்கெனவே மாநிலத்தின் 13 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் அனைத்து நகர்ப்புறங்களிலும் 60 மணி நேர ஊரடங்கு விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. 

முன்னதாக, ம.பி.யின் அனைத்து நகரங்களிலும் இரவு ஊரடங்கு உத்தரவை மாநில அரசு அறிவித்தது. புதன்கிழமை நிலவரப்படி ஒரேநாளில் 4,043 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்களும் பொது முடக்கத்தைக் கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இதையடுத்து, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கைகளைக் கழுவுதல் போன்றவை அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் துணை ராணுவ தலைமையகத்தில் தற்கொலைப் படை தாக்குதல்! 10 பேர் பலி!

தெலுங்கு புரமோஷனில் கன்னடம்... விமர்சனத்திற்கு ஆளான ரிஷப் ஷெட்டி!

ஸ்ரீமத் ராமாயணம் தொடரின் குழந்தை நட்சத்திரம் பலி!

விஜய் வெளியிட்ட விடியோ! |மனசு முழுக்க வலி! |Vijay video

அக். 3 பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுமா?

SCROLL FOR NEXT