இந்தியா

ஐஐடி ரூர்க்கியில் 88 மாணவர்களுக்கு கரோனா

IANS

உத்தரகண்ட் மாநித்தின் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின்(ஜஜடி)ரூர்கியில் 88 மாணவர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதா கல்விநிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் சோனிகா ஷிரிவஸ்த்வா கூறுகையில், 

பாதிக்கப்பட்ட 88 மாணவர்களும் ஐ.ஐ.டி வளாகத்திற்குள் உள்ள கங்கா விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது சிறப்பு கோவிட் பராமரிப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாணவர்கள் ஹரித்வார் மருத்துவ அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். வளாகத்தில் உள்ள கிட்டத்தட்ட ஐந்து விடுதிகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் எந்தவித பாதிப்புமின்றி நடைபெறும் என்று அவர் கூறினார்.

ஐஐடி.யில் மாநில அரசின் அனைத்து கரோனா வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பதாக அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதம் புதுமை செய்த பாரதி

உலகின் சிறந்த நாவல்கள்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

SCROLL FOR NEXT