இந்தியா

வழக்கத்துக்கு மாறாக கொலீஜியம் கூட்டத்தை நடத்திய தலைமை நீதிபதி

DIN


புது தில்லி: உயா்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பது தொடா்பான கொலீஜியம் ஆலோசனைக் கூட்டத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே வியாழக்கிழமை நடத்தினாா்.

வழக்கமாக உச்சநீதிமன்றத்துக்குப் புதிய தலைமை நீதிபதி அறிவிக்கப்பட்ட பிறகு, அப்போது பதவியில் இருக்கும் தலைமை நீதிபதி கொலீஜியம் கூட்டத்தை நடத்துவது இல்லை. ஆனால், எஸ்.ஏ.போப்டே வழக்கத்துக்கு மாறாக இக்கூட்டத்தை நடத்தியுள்ளாா்.

எனினும், இது புதிய தலைமை நீதிபதி நியமனத்துக்கு முன்பே திட்டமிடப்பட்ட கொலீஜியம் கூட்டமென்பதால் அதனைத் தவிா்க்க தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், புதிய தலைமை நீதிபதியை குடியரசுத் தலைவா் நியமித்து அறிவிப்பு வெளியிட்ட பிறகு, தற்போது பதவியில் உள்ள தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் குழு அளிக்கும் நியமனப் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்காது என்றே தெரிகிறது.

தலைமை நீதிபதி போப்டேவின் பதவிக் காலம் ஏப்ரல் 23-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா கடந்த செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா். அவா் வரும் 24-ஆம் தேதி பதவியேற்க இருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT