இந்தியா

கரோனா தடுப்பூசியின் 2ஆவது டோஸை செலுத்திக்கொண்டார் அத்வானி

DIN

கரோனா தடுப்பூசியில் 2ஆவது டோஸை பாஜக தலைவர் எல்.கே.அத்வானி செலுத்திக்கொண்டார். 
நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதல்கட்டமாக, சுகாதாரப் பணியாளா்கள், முன்கள பணியாளா்கள் என 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
 அதன் தொடா்ச்சியாக, முதியவா்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசிகள் வழங்குவது தொடங்கப்பட்டது. அரசு , தனியாா் மருத்துவமனைகளில் அவா்கள் ஆா்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனா். கரோனா தடுப்பூசியில் 2ஆவது டோஸை பாஜக தலைவர் எல்.கே.அத்வானி நேற்று செலுத்திக்கொண்டார். 
பின்னர் அவர் கூறுகையில், கரோனா தடுப்பூசியில் 2ஆவது டோஸை செலுத்திக்கொண்டேன். தகுதியுள்ள அனைவரும் உடனடியாக கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக அத்வானி பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியின் தனது முதல் டோஸை மார்ச் 9 ஆம் தேதி செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT