முகப்பு
இந்தியா

உ.பி.,யில் தினசரி பாதிப்பு அதிகரிப்பு: ஒரேநாளில் 8,490 பேருக்கு கரோனா 

உத்தரப் பிரதேசத்தில் ஒரேநாளில் 8,490 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:57 PM
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் ஒரேநாளில் 8,490 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிப்பு அதிகரித்து வரும் மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 
இந்த நிலையல் உத்தரப் பிரதேசத்தில் ஒரேநாளில் 8,490 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு மேலும் 39 பேர் பலியாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 39,338 பேர் சிகிச்சையில் உள்ளனர். 
கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மீரட், காசியாபாத், நொய்டா மற்றும் பரேலி ஆகிய பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments