ஆந்திரத்தில் ஒரேநாளில் 2,765 பேருக்கு கரோனா
ஆந்திரத்தில் ஒரேநாளில் 2,765 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் ஒரேநாளில் 2,765 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1.31 லட்சத்தைக் கடந்துள்ளது. உயிரிழப்பவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் ஆந்திரத்தில் ஒரநாளில் 2,765 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,765 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,18,597ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 11 பேர் பலியானார்கள். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 7,279ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து 1,245 பேர் குணமடைந்தனர்.
இதுவைரை 8,94,896 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 7,279 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.