முகப்பு
இந்தியா

கேரளத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

கேரளத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் 63,240 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் புதிதாக 5,063 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது 36,185 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 
கரோனாவுக்கு இன்று மேலும் 22 பேர் பலியாகினர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 4,750ஆக உயர்ந்துள்ளது. 
கரோனாவிலிருந்து இன்று 2,475 பேர் குணமடைந்தனர். இதன்மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,12,758ஆக உயர்ந்துள்ளது. 
1,60,181 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். 369 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments