முகப்பு
இந்தியா

அதிகரித்துவரும் கரோனா தொற்றால் தில்லியில் பள்ளிகளை மூட உத்தரவு

தில்லியில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 9 ஏப்ரல், 2021 at 5:39 PM
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

தில்லியில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு மாநிலங்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் தலைநகர் தில்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே இரவு நேரப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். 

Advertisement

இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது சுட்டுரைப் பதிவில் அறிவித்துள்ளார்.

தில்லியில் வியாழக்கிழமை ஒரே நாளில்  7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.