2ஆம் தவணை கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார் சிக்கிம் ஆளுநர் 
இந்தியா

2ஆம் தவணை கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார் சிக்கிம் ஆளுநர்

சிக்கிம் ஆளுநர் மற்றும் அவரது மனைவி வெள்ளிக்கிழமை இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டனர். 

PTI

சிக்கிம் ஆளுநர் மற்றும் அவரது மனைவி வெள்ளிக்கிழமை இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டனர். 

சோச்சியாகாங்கில் உள்ள எஸ்.டி.என்.எம் மருத்துவமனையில் ஆளுநர் கங்கா பிரசாத் மற்றும் அவரது மனைவி கமலா தேவியும் இரண்டாவது தவணையாக தடுப்பூசி இன்று செலுத்திக் கொண்டனர். 

கடந்த மார்ச் 3-ஆம் தேதி முதல் தவணை கரேனா தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசியை எடுத்துக்கொண்டனர். 

தன்னையும், மற்றவர்களையும் பாதுகாப்பதற்காக அனைவரும் தடுப்பூசி நிச்சயம் எடுத்துக்கொள்ளுமாறு 81 வயதான பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மேலும், சமூக விலகல் கடைப்பிடித்தல், கை கழுவுதல் மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளும் மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

திருவண்ணாமலை உழவா் சந்தையில் 27 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை: வேளாண் அலுவலா் சுபஸ்ரீ தகவல்

மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியோட்டம்

SCROLL FOR NEXT