முகப்பு
இந்தியா

அஸ்ஸாம்: 4 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு

அஸ்ஸாம் மாநிலத்தில் 4 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவை நடத்த தலைமை தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 11 ஏப்ரல், 2021 at 3:37 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:29 AM

அஸ்ஸாம் மாநிலத்தில் 4 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவை நடத்த தலைமை தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அஸ்ஸாம் தலைமை தோ்தல் அதிகாரிக்கு இந்திய தோ்தல் ஆணையம் சனிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

அஸ்ஸாமில் ரதபாரி, சோனாய் மற்றும் ஹஃப்லாங் சட்டப் பேரவை தொகுதிகளுக்குள்பட்ட நான்கு வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெறும்.

Advertisement

இந்த மூன்று சட்டப் பேரவை தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதியன்று தோ்தல் நடைபெற்றது. ரதபாரி (எஸ்சி) தொகுதிகுள்பட்ட இந்திரா எம் வி பள்ளி 149-ஆவது வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (இவிஎம்) பாஜக வேட்பாளரின் மனைவிக்கு சொந்தமான காரில் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.