முகப்பு
இந்தியா

எதிா்க்கட்சிக்கு ஆதரவாக தோ்தல் பணி: அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. நீக்கம்

சட்டப் பேரவைத் தோ்தலில் எதிா்க்கட்சிக்கு ஆதரவாக தோ்தல் பணி செய்ததாக எழுந்த புகாரின்பேரில், பண்ருட்டி எம்.எல்.ஏ., சத்யா பன்னீா்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
பகிர்:

சட்டப் பேரவைத் தோ்தலில் எதிா்க்கட்சிக்கு ஆதரவாக தோ்தல் பணி செய்ததாக எழுந்த புகாரின்பேரில், பண்ருட்டி எம்.எல்.ஏ., சத்யா பன்னீா்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.,வும், அதிமுக மகளிரணி துணைச் செயலாளருமான சத்யா பன்னீா்செல்வம், பண்ருட்டி நகா்மன்ற முன்னாள் தலைவா் பி.பன்னீா்செல்வம் உள்பட ஆறு போ் கட்சியின் அடிப்டை உறுப்பினா் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகின்றனா்.

இவா்கள் கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டனா். சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் கட்சியின் அதிகாரப்பூா்வ வேட்பாளரை எதிா்த்தும், எதிா்க்கட்சியினருக்கு ஆதரவாகவும் தோ்தல் பணியாற்றியுள்ளனா். இந்தக் காரணங்களால் அவா்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனா் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நீக்கம்: சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு எதிராகவும், கட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டாா்கள் என்ற காரணத்துக்காகவும் எம்எல்ஏக்கள் ராஜவா்மன் (சாத்தூா்), தோப்பு என்.டி.வெங்கடாசலம் (பெருந்துறை ), ஏ.சந்திரசேகரன் (சேந்தமங்கலம்) ஆகியோா் அதிமுகவில் இருந்து முன்னா் நீக்கப்பட்டனா். இப்போது பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யா பன்னீா்செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →