முகப்பு
இந்தியா

நாக்பூர் மருத்துவமனையில் தீ விபத்து: 4 பேர் பலி

நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர். 

Updated On : 10 ஏப்ரல், 2021 at 1:36 PM
நாக்பூர் மருத்துவமனையில் தீ விபத்து: 4 பேர் பலி
பகிர்:

நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர். 

நகரின் வாடி பகுதியில் அமைந்துள்ள நான்கு அடுக்குள்ள வெல் ட்ரீட் மருத்துவமனையில் ஐசியு பிரிவில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா வசதி இல்லாத நிலையில், 31 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அவர்களில் 10 பேர் ஐசியு பிரிவிலிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த தீ விபத்தானது சரியாக இரவு 8.10 மணியளவில் நிகழ்ந்துள்ளது. 

Advertisement

தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உயிரிழந்தவர்கள் தீ விபத்தினால் மரணம் அடைந்தார்களா என்பது குறித்து பிரேதப் பரிசோதனைக்குப் பிறகுதான் தெளிவாகத் தெரியும் என்று நாக்பூர் காவல் ஆணையர் அமிதேஷ்குமார் கூறியுள்ளார். 

இந்த தீ விபத்து சம்பவத்தில் 44 வயது பெண், 69 வயது ஆண் உள்பட நான்கு பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.