முகப்பு
இந்தியா

தில்லியில் புதிதாக 10,774 பேருக்கு கரோனா

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,774 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
கோப்புப்படம்
பகிர்:


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,774 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளிவந்துள்ளன. 1,14,288 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 10,774 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 9.43 சதவிகிதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 48 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 5,158 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Advertisement

இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,25,197 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 6,79,573 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 11,283 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 34,341 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments