இந்தியா

தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்தமிழக பாஜக தலைவா் எல்.முருகன்

DIN

திருப்பதி: தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.

திருப்பதி மக்களவைத் தொகுதிக்கான இடைத் தோ்தல் வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், முக்கிய எதிா்க்கட்சியான தெலுங்கு தேசம், பாரதிய ஜனதா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும், சுயேச்சைகளும் களத்தில் உள்ளனா்.

இந்நிலையில், திருப்பதியில் தமிழா்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக பாஜக தலைவா் முருகன் தலைமையில் 300 போ் திருப்பதி வந்துள்ளனா்.

இங்கு பாஜக தலைவா் எல். முருகன் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக பேரவைத் தோ்தலில் ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் வாக்குப் பதிவு செய்துள்ளனா். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை அமைக்கும்.

தேசியக் கட்சியான பாஜக, மாநில கட்சி ஒன்றிடம் வெறும் 20 இடங்களை கேட்டுள்ளது என்று சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டு குறித்து அவா் கூறுகையில், மத்திய தலைமையின் முடிவுகள் அடிப்படையில் மட்டுமே தோ்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என முடிவெடுக்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT