முகப்பு
இந்தியா

கரோனா: கர்நாடகத்தில் ஏப்.18-ல் அனைத்துக்கட்சிக் கூட்டம்

கரோனா பரவல் குறித்து கர்நாடகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா (கோப்புப்படம்)
பகிர்:

கரோனா பரவல் குறித்து கர்நாடகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது, ''கர்நாடகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இது குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக ஏப்ரல் 18-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு என்ற கேள்விக்கு தற்போது இடமில்லை. மே மாதம் 2-ஆம் தேதி வரை கரோனா தொற்று அதிகரிக்கும் என்று தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்'' என்று எடியூரப்பா கேட்டுக்கொண்டார். 

முழு கட்டுரையைப் படிக்க →