இந்தியா

பாஜகவின் தூண்டுதலாலேயே மம்தா பிரசாரத்திற்கு தடை விதிப்பு: சிவசேனை எம்.பி.

DIN

பாஜகவின் தூண்டுதலாலேயே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பிரசாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் 4 கட்டங்களுக்கான தேர்தல் நடைபெற்றதையடுத்து, மீதமுள்ள 4 கட்டங்களுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 17 மற்றும் ஏப்ரல் 29 இடையே நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்தல் விதிகளை மீறியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி அடுத்த 24 மணி நேரத்துக்கு பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நேற்று தடை விதித்தது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிவசேனை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத், பாஜக அரசின் உத்தரவிற்கு கட்டுப்பட்டே தேர்தல் ஆணையம் மம்தாவின் பிரசாரத்திற்கு தடை விதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும்,  இது இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் இறையாண்மை மீதான நேரடித் தாக்குதல்  என அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

முன்னதாக பிரசாரம் மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்ததை எதிர்த்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தாவில் காந்தி சிலை அருகே தர்ணா போராட்டத்தைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT