இந்தியா

பாட்னா: நோயாளி இறந்துவிட்டதாகக் கூறி வேறொருவரின் உடலை ஒப்படைத்த மருத்துவமனை

DIN

பாட்னாவில், உயிரோடு இருந்த கரோனா நோயாளி இறந்துவிட்டதாக அறிவித்து இறப்புச் சான்றிதழுடன், வேறு ஒருவரின் உடலையும் ஒப்படைத்த அரசு மருத்துவமனை பற்றிய தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது, கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி மொகம்மத்பூரைச் சேர்ந்த சுன்னு குமார் என்பவர் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு பாட்னா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அப்போது அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், கரோனா வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், கடந்த ஞாயிறன்று சின்னு இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தாரிடம் தெரிவிக்கப்பட்டது. இறுதிச் சடங்குக்காக முழுவதும் மூடப்பட்டு உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுப்புச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

மருத்துவமனை கண்காணிப்பின் கீழ் இறுதிச் சடங்குகள் நடந்தபோது, உடலை அடக்கம் செய்யும் முன் குடும்பத்தாருக்கு அவரது முகத்தைப் பார்க்க அனுமதி வழங்கப்ப்பட்ட போதுதான், அது சின்னுவின் உடல் அல்ல என்பது தெரிய வந்தது.

அப்போதுதான் சின்னு இறக்கவில்லை என்பதும், வேறொரு நபரின் உடல் சின்னுவின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதும் தெரிய வந்தது. 

உயிரோடு இருக்கும் நோயாளி இறந்துவிட்டதாகக் கூறி, அவருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் மருத்துவமனை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT