துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மேற்கு வங்க பாஜக தலைவர் ராகுல் சின்காவிற்கு 2 நாள் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் 44 தொகுதிகளுக்கான 4ஆம் கட்ட வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிலையில், கூச்பிகார் மாவட்டத்தில் சிதல்குச்சி பகுதியில் வாக்களிப்பு நடந்து கொண்டிருந்தபோது மத்திய சிஐஎஸ்எப் ஊழியர்கள் வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருந்த வாக்காளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் பலியாகினர்.
இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இதுகுறித்து மேற்கு வங்க பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்கா, குறைந்தது 8 பேர் மீதாவது துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்க வேண்டும் எனத் தெரிவித்த கருத்து சர்ச்சையானது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி வன்முறையைத் தூண்டும் விதமாக கருத்து தெரிவித்த ராகுல் சின்கா மீது நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (ஏப்ரல் 15) மதியம் 12 மணி வரை பிரசாரம் மேற்கொள்ள தடை விதித்து ராகுல் சின்காவிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.