இந்தியா

320 டோஸ் கரோனா தடுப்பூசி மருந்து திருட்டு 

DIN

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 320 டோஸ் கரோனா தடுப்பூசி மருந்துகள் திருடப்பட்டன.
இதுகுறித்து ஜெய்ப்பூர் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி நரோத்தம் மிஸ்ரா புதன்கிழமை கூறுகையில், "சாஸ்திரி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கோவேக்ஸின் மருந்தின் 320 டோஸ்கள் திருடப்பட்டதாக அந்த மருத்துவமனை அதிகாரிகள் மூலம் செவ்வாய்க்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக துறைவாரியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார். 
"கோவேக்ஸின் மருந்தின் 32 குப்பிகள் திருடப்பட்டுள்ளன. ஒரு குப்பியில் 10 ஊசிகளுக்கான மருந்துகள் இருக்கும். அந்த வகையில் கோவேக்ஸின் மருந்தின் 320 டோஸ்கள் திருடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்று சாஸ்திரி நகர் காவல்நிலைய அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT