முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 1.84 லட்சம் பேருக்கு கரோனா; 1,027 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,84,372 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,027 பேர் கரோனாவுக்கு பலியாகினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
பகிர்:


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,84,372 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,027 பேர் கரோனாவுக்குப் பலியாகினர்.

நாட்டில் நாள்தோறும் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 1,84,372 பேர் உள்பட மொத்த பாதிப்பு 1,38,73,825 ஆக அதிகரித்துள்ளது. 

இதுவரை 1,23,36,036 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 13,65,704 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Advertisement

மேலும் கரோனா பாதித்த 1,027 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,72,085 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 11,11,79,578 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments