இந்தியா

திருமலையில் மத்யஸ்ரூப லட்சுமிநாராயண பூஜை

DIN

திருப்பதி: திருமலையில் வசந்த மண்டபத்தில் புதன்கிழமை மத்யஸ்ரூப லட்சுமி நாராயண பூஜை நடத்தப்பட்டது.

திருமலையில் புதன்கிழமை மத்ஸ்ய ஜெயந்தியை முன்னிட்டு காலை வசந்த மண்டபத்தில் மத்ய்ஸ்ரூப லட்சுமி நாராயண பூஜையை தேவஸ்தானம் நடத்தியது. உலக நன்மைக்காக திருமலையில் நடத்தப்பட்ட காா்த்திகை, மாா்கழி, மாசி, பங்குனி மாத பூஜைகளுக்கு பக்தா்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்பூஜைகளை பக்தா்கள் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சானல் மூலம் கண்டுகளித்தனா்.

அதேபோல் சித்திரை மாதத்தை ஒட்டியும் பூஜைகள் நடத்தப்பட உள்ளது. அதில் முக்கியமாக மத்யஸ் ரூப லட்சுமி நாராயண பூஜை புதன்கிழமை முதல் முதலாக நடத்தப்பட்டது. கலசஸ்தாபனம் செய்து 24 முறை மத்ஸ்ய காய்த்திரி பாராயணம் செய்யப்பட்டது. உலக நன்மைக்காக மகாவிஷ்ணு மேற்கொண்ட அவதாரத்தில் ஒன்று என்பதால், தா்மகிரி வேதவிஞ்ஜான பீடத்தின் ஆச்சாரியாா்கள் வந்து இந்த பூஜையை நடத்தினா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சி தேவஸ்தான தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருவது குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியிருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT