முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் ஏப்.30 வரை பகுதிநேரப் பொதுமுடக்கம் அறிவிப்பு

அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை பகுதி நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
ராஜஸ்தானில் ஏப்.30 வரை பகுதிநேரப் பொதுமுடக்கம் அறிவிப்பு
பகிர்:

அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை பகுதி நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்களிலும் இரவுநேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வேகமாகப் பரவி வரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநில அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாநிலம் முழுவதும் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பகுதிநேரப் பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருக்கும் இந்தப் பொதுமுடக்கத்தில் இருந்து அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →