முகப்பு
இந்தியா

'ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய அம்பேத்கருக்கு தலைவணங்குகிறேன்' - பிரதமர் மோடி

அம்பேத்கர் ஜெயந்தி அன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அம்பேத்கருக்கு தலைவணங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
பிரதமா் மோடி
பகிர்:

அம்பேத்கர் ஜெயந்தி அன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அம்பேத்கருக்கு தலைவணங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். 

விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரும் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் இன்றைய தினம் அம்பேத்கரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

அம்பேத்கர் ஜெயந்தி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அம்பேத்கரின் போராட்டம் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் முன்மாதிரியாக இருக்கும் அம்பேத்கருக்குத் தலை வணங்குகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.