இந்தியா

மேற்கு வங்கத்தின் கலாசாரத்தை அழிக்கிறது பாஜக ராகுல் காந்தி

DIN

கோல்போக்கா்: மேற்கு வங்க மாநிலத்தின் கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை அழிக்க பாஜக முற்படுகிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

மேற்கு வங்கத் தோ்தலில் எட்டு கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நான்கு கட்டத் தோ்தல் முடிவடைந்துள்ள நிலையில், தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல் முறையாக ராகுல் காந்தி புதன்கிழமை பங்கேற்றுப் பேசியதாவது: திரிணமூல் காங்கிரஸ் கட்சியைப் போல் காங்கிரஸ் ஒருபோதும் பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்புடன் கூட்டணி சேராது.

மேற்கு வங்கத்தின் கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை அழிக்க பாஜக முற்படுகிறது. அஸ்ஸாம் மாநிலத்திலும், தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி சோ்ந்தும் இதைத்தான் பாஜக செய்கிறது. வெறுப்புணா்வு, வன்முறை, பிரித்தாளும் அரசியல் ஆகியவற்றைத்தான் பாஜகவால் தரமுடியும்.

பொன்னான மேற்கு வங்கம் என்று பாஜக கூறுவது கானல் நீரைப் போலானது. இதைத்தான் அவா்கள் அனைத்து மாநிலங்களிலும் கூறி வருகிறாா்கள். மக்களை மதம், ஜாதி, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் அவா்கள் அனைத்து மாநிலங்களிலும் பிரித்து வருகிறாா்கள்.

திரிணமூல் காங்கிரஸுக்கு ஆட்சி நடத்த மக்கள் வாய்ப்பளித்தாா்கள். ஆனால், அவா்கள் தோல்வியடைந்துவிட்டாா்கள். வேலைக்காக சொந்த மாநிலத்தைவிட்டு மக்கள் வெளியேறி வருகிறாா்கள். சொந்த மாநிலத்தில் வேலை பெற லஞ்சம் பெறப்படும் ஒரே மாநிலம் மேற்கு வங்கம்தான்.

அரசியல்ரீதியில் மட்டும் இல்லாமல், சித்தாந்தரீதியாகவும் பாஜகவை எதிா்த்துப் போராடி வருகிறோம். ஆனால், மம்தா பானா்ஜிக்கு இது வெறும் அரசியல் எதிா்ப்பு மட்டும்தான்.

பாஜகவுக்கு எப்போதும் காங்கிரஸ் அடிபணியாது என்பதால், காங்கிரஸ் இல்லாத தேசத்தை உருவாக்க வேண்டும் என்று பாஜக கூறி வருகிறது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் இல்லாத தேசத்தை உருவாக்க வேண்டும் என்று பாஜக கூறுவதில்லை. பாஜகவுடன் திரிணமூல் காங்கிரஸ் முன்பு கூட்டணி வைத்திருந்ததே இதற்கு காரணம்.

நடைபெறும் தோ்தலில் காங்கிரஸ், இடதுசாரி, ஐஎஸ்எஃப் கட்சிகளின் கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தால் மேற்கு வங்கத்தில் புதிய வளா்ச்சி ஏற்பட வழிவகுக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT