ஒரே நாளில் 2 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு; 1,038 பேர் பலி
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,038 பேர் கரோனாவுக்குப் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,038 பேர் கரோனாவுக்குப் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் நாள்தோறும் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும அதிகமானோருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.
படிக்க: 140-வது நாளாகத் தொடரும் விவசாயிகள் போராட்டம்
Advertisement
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட 93,528 பேர் புதிதாக குணமடைந்து வீடு திரும்பியதால், இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1,24,29,564-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 14,71,877 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் புதிதாக கரோனா பாதித்த 1,038 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,73,123-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 11 கோடியே 44 லட்சத்து 93 ஆயிரத்து 238 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.