சாத்தான்குளம்: கூட்டுறவு வங்கியில் கபசுர குடிநீர் விநியோகம்
சாத்தான்குளம் அருகே சாஸ்தாவி நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி
சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே சாஸ்தாவி நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வியாழக்கிழமை (15.4. 2021) கரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவிற்கு சங்க தலைவர் ஏ. லூர்து மணி தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். சாஸ்தாவி நல்லூர் ஊராட்சி மன்ற தலைவி திருக்கல்யாணி சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எம் ரவிச்சந்திரன், வி அருள்ராஜ், அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நிர்வாகக் குழு உறுப்பினர் இருதயராஜ், சாஸ்தாவி நல்லூர் கிராம கமிட்டி காங்கிரஸ் செயலாளர் மரிய செல்வ ஜெகன், தெற்கு வட்டார துணைத்தலைவர் முத்துராஜ், கொழுந்தட்டு கிராம கமிட்டி பொறுப்பானர் ராஜதுரை, சுப்பிரமணியபுரம் கிராம கமிட்டி காங்கிரஸ் தலைவர் ஆசீர் செயலாளர் மில்டன், (கொழுந்தட்டு இளைஞர் காங்கிரஸ் தலைவர் நிஷாந்த் ஊராட்சி உறுப்பினர் சாலமோன், தெற்கு வட்டார மகிளா காங்கிரஸ் தலைவி பெல்சியா, போலையர்புரம் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேவராஜ், சத்துணவு ஊழியர் சங்க வட்ட தவைவர் அந்தோணி, தமிழ்செல்வன், சாஸ்தாவி நல்லூர் விவசாய நல சங்க உறுப்பினர்கள், ஜஸ்டின், வெலிங்டன், டைட்டஸ், ஜெயக்குமார், சந்தன திரவியம், அந்தோணி ராஜ், ராஜ், ரூபேஷ்குமார், சீமான், சவரிமுத்து, ரூபன், மற்றும் கனி ரூபி அனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சங்க துணைச் செயலர் பென்சிகர் நன்றி கூறினார்.