இந்தியா

கோவாவில் பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து இன்னும் யோசிக்கவில்லை: சாவந்த்

கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து கோவா அரசு இதுவரை யோசிக்கவில்லை என்று அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். 

PTI

கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து கோவா அரசு இதுவரை யோசிக்கவில்லை என்று அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சாவந்த்..

கோவாவில் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 24 முதல் நடைபெற உள்ளன. மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. 

மாணவர்கள் தேர்வு அறைக்கு வந்து பாதுகாப்பாக தேர்வெழுத அனைத்துவித முன்னேற்பாடுகளும் நடத்தி வருகிறோம். மேலும், பிற வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கடந்தாண்டு கரோனா தொற்றுக்கு மத்தியில் பொதுத்தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. முறையான சமூக இடைவெளியைப் பயன்படுத்தி ஒரு வகுப்புக்கு 11 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்பட்டனர். 

இந்நிலையில், இந்தாண்டு சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புக்கான தேர்வுகளை ரத்து செய்தும், 12-ஆம் வகுப்புக்கான தேர்வை ஒத்தி வைத்துள்ளது. 

கரோனா காரணமாக, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்படப் பல மாநிலங்களில் பொதுத்தேர்வு ஒத்தி வைத்துள்ளனர். ஆனால், திட்டமிட்டபடி தேர்வுகளை நடத்துவதாகக் கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி கோவாவில் 473 புதிய பாதிப்பும், நால்வரும் உயிரிழந்தனர். இதன் மூலம், மாநிலத்தில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 63,815ஐ எட்டியுள்ளது. அதிகாரப்பூர்வ தகவலின்படி, பலி எண்ணிக்கை 857 ஆக உயர்ந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-வது டெஸ்ட்டில் பாட் கம்மின்ஸ் விளையாடுவாரா? அலெக்ஸ் கேரி பதில்!

திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா வா வாத்தியார்?

பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் மோசமானவர்கள்: வெளியேறிய திவாகர் கருத்து

தில்லியில் புதிதாக 40 மின்சார பேருந்துகள்: ரேகா குப்தா!

4 முறை சாம்பியனான ஜெர்மனி உலகக் கோப்பைக்குத் தேர்வு!

SCROLL FOR NEXT