ஹரித்வார் 5 நாள் கும்பமேளாவில் 1,700 பேருக்கு கரோனா பாதிப்பு
கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ஹரித்வாரில் நடைபெற்ற 5 நாள் கும்பமேளாவில் பங்கேற்ற 1700 பேருக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ஹரித்வாரில் நடைபெற்ற 5 நாள் கும்பமேளாவில் பங்கேற்ற 1700 பேருக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, கும்பமேளா நடைபெற்ற ஹரித்வார் பகுதியில் ஏப்ரல் 10 முதல் 14-ஆம் தேதி வரை 1,701 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹரித்வாரில் நடைபெற்ற கும்பமேளாவில் பங்கேற்ற பக்தர்கள் உள்பட பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் மற்றும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை முறைகளில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இன்னமும் பலரது கரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகவில்லை. அனைத்தும் வெளியான நிலையில், கும்ப மேளா நடைபெற்ற தளத்தில் சுமார் 2000 பேர் வரை கரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று ஹரித்வாரா மூத்த மருத்துவ அதிகாரி ஷாம்பு குமார் ஜா தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து நாள்களில் சுமார் 48.51 லட்சம் பேர் கும்ப மேளாவில் பங்கேற்று புனித நீராடியிருப்பார்கள் என்கிறது புள்ளி விவரம்.