முகப்பு
இந்தியா

உ.பி.யில் வார இறுதி நாள்களில் பொதுமுடக்கம் அறிவிப்பு

கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் உ.பி.யில்  உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கம் அறிவித்து அம்மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

Updated On : 16 ஏப்ரல், 2021 at 2:59 PM
உ.பி.யில் அனைத்து மாவட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம்
பகிர்:

கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் உ.பி.யில்  உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கம் அறிவித்து அம்மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களிலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமை வாரந்தோறும் முழுவதுமாக மூடப்படும். ஆனால், துப்பரவு, சுத்திகரிப்பு மற்றும் அவசர சேவைகள் மட்டுமே வழக்கம்போல் செயல்படும்.

மேலும், முதல்முறையாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதமும், மீண்டும் மீண்டும் முகக்கவசம் இன்றி பிடிபடுபவர்களுக்கு 10 மடங்கு அபராதம் வசூலிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. 

Advertisement

இதுதொடர்பாக, தேவையான விழிப்புணர்வு பணிகளும் செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். 

வியாழக்கிழமை நிலவரப்படி மாநிலத்தில் 104 இறப்புகளும், 22,439 பேருக்கு புதிதாகத் தொற்றும் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.