இந்தியா

தில்லியில் இன்று ஒரேநாளில் 19,486 பேருக்கு கரோனா

DIN

தில்லியில் இன்று ஒரேநாளில் 19,486 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்று மொத்தம் 98,957 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், புதிதாக 19,486 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கரோனாவால் 141 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,03,623 -ஆகவும் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,793-ஆகவும் உயா்ந்துள்ளது. 
தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை 61,005 -ஆக உள்ளது. வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டுள்ளவா்கள் எண்ணிக்கை 29,705-ஆக உள்ளது. கட்டுப்பாட்டுப் பகுதிகள் 9,929- ஆக அதிகரித்துள்ளது. கரோனா நோயாளிகளுக்காக மருத்துவமனைகளில் 15,680 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 11,268 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 
கரோனாவிலிருந்து இன்று 12,649 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 7,30,825 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT